தமிழ்நாட்டில் இருந்த குமரி வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுகிறதா?: லஞ்சஒழிப்பு போலீசார் தீவிர சோதனை..!!

குமரி: தமிழ்நாட்டில் இருந்த குமரி வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து ஆரல்வாய்மொழி மற்றும் களியக்காவிளை சோதனை சாவடிகளில் லஞ்சஒழிப்பு போலீசார் பலமணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர். நாகர்கோவில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆரல்வாய்மொழி மற்றும் களியக்காவிளை சோதனை சாவடிகள் வழியாக தான் கேரளாவுக்கு அனைத்து வாகனங்களும் செல்ல வேண்டும். இந்த 2 சோதனை சாவடிகள் வழியாக கனிம வளங்கள் முறையான அனுமதி இல்லாமல் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன.

இவற்றை சோதனை சாவடி ஊழியர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு கண்டுகொள்வதில்லை என பல்வேறு தரப்பினரும் வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், புகார்களின் அடிப்படையில் லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி. தர்மராஜ் தலைமையிலான குழுவினர் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் இன்று காலை முதல் பலமணி நேரமாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். களியக்காவிளை சோதனை சாவடியிலும் லஞ்சஒழிப்பு போலீசார் பலமணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் சோதனை சாவடி அலுவலகம் அருகில் உள்ள வீடுகள், தண்ணீர் டேங்க் உள்பட பல பகுதிகளில் சோதனை நடைபெற்றது. அப்போது சோதனை சாவடி அருகே சிறு, சிறு பண்டல்களாக சுற்றி புதர்களில் வீசி எறியப்பட்டிருந்த 15 ஆயிரம் ரூபாயை லஞ்சஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பணியில் இருந்த 2 உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: