கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சி ஏரியில் மிதந்து வந்த உடல் திடீரென அசைந்ததால் ‘பகீர்’

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியை நேற்று காலை சுற்றுலாப்பயணிகள் ரசித்தபடி இருந்தனர். அப்போது ஏரியின் நடுவில் பிணம் மிதப்பது போல் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசாருக்கு தெரிவித்தனர். இதையடுத்து கொடைக்கானல் போலீசார், தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்தனர். தீயணைப்பு வீரர்கள் படகு மூலம் ஏரியின் நடுப்பகுதிக்கு சென்றபோது, திடீரென உடல் அசைய தொடங்கியது. இதனால் தீயணைப்பு வீரர்கள், கரையில் நின்ற சுற்றுலாப்பயணிகள், மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பிறகுதான் மிதப்பது பிணம் அல்ல... உயிருள்ள நபர் என புரிந்து கொண்டனர். அப்போது தண்ணீரில் மிதந்த நபர், ‘‘நான் ஒரு சிவனடியார். தண்ணீரில் மிதந்தபடி ஆசனம் செய்கிறேன். என்னை தொந்தரவு செய்யாதீர்கள்’’ என தீயணைப்பு வீரர்களை பார்த்து கூறினார். கடும் எச்சரிக்கைக்கு பின் அவர் நீந்தியபடி கரைக்கு சென்றார்.

Related Stories:

>