ஐபிஎல் தொடர்: காயத்தால் குல்தீப் விலகல்

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான கொல்கத்தா அணியில் இடம் பிடித்து இருந்த இந்திய இடது சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ். இவருக்கு பயிற்சியின் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து போட்டி தொடரில் இருந்து விலகி நாடு திரும்பி இருக்கிறார். சமீபத்தில் தான் குல்தீப், முழங்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து மீண்டு வந்திருந்தார்.

இந்நிலையில் அவர் மீண்டும் காயம் அடைந்து இருப்பதால் குணமடைய நீண்ட காலம் ஆகும் என்று கூறப்படுகிறது. இவர் இந்திய அணிக்காக 7 டெஸ்ட், 65 ஒரு நாள், 23 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். மொத்தம் 174 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

Related Stories:

>