காப்பக குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பணியிடை நிக்கம்

சென்னை: சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் மெட்ராஸ் கிறிஸ்டியன் கவு ன்சில் ஆப் சோசியல் சர்விஸ் அமைப்பு சார்பில் நடத்தப்படும் காப்பகத்தில்,  நிர்வாக செயலாளராக இசபெல்லா ரிச்சர்ட்சன் பதவி வகித்து வருகிறார். இவர் சென்னை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தார். அந்த காப்பகத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் வந்ததையடுத்து அங்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. புகார் உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் இசபெல்லா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சமூக நலம் மற்றும் மகளிர் மேம்பாட்டிற்கான பல்வேறு நடவடிக்கைகள் துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பதிவு செய்யப்படாத 92 முதியோர் இல்லங்கள் கண்டறியப்பட்டு 4 முதியோர் இல்லங்கள், 9 குழந்தைகள் காப்பகங்கள் மூடப்பட்டுள்ளன. குழந்தை திருமணங்கள், சிசுகொலை, முதியோர் நலன் பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்த முகாம்கள் அமைக்கப்பட உள்ளது, என்றார்.

Related Stories:

>