ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தலில் சோஷியல் ஜனநாயக கட்சி வெற்றி: மெர்க்கலின் ஆளும் கட்சி வரலாறு காணாத வீழ்ச்சி

பெர்லின்: ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தல் முடிவில், ஆளும் சிடியு கட்சியை விட சோஷியல் ஜனநாயக கட்சி அதிக சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இடங்கள் கிடைக்காததால் புதிய அரசு அமைவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 299 தொகுதிகளில் 735 வெற்றியாளர்களை மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள். ஜெர்மனியில் கடந்த 2005ம் ஆண்டு முதல் 16 ஆண்டாக அதிபராக ஏஞ்சலா மெர்கல் இருந்து வருகிறார். 5வது முறையாக அவர் அதிபராக விரும்பவில்லை என தேர்தலுக்கு முன்பாகவே அறிவித்து விட்டார். இதனால், அதிபர் வேட்பாளராக ஆளும் சிடியு கட்சி சார்பில் அர்மின் லாஸ்செட் களமிறக்கப்பட்டார்.

தேர்தலில், நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, சீனாவின் ஆதிக்கம் போன்ற காரணங்களாலும், மெர்கலின் விலகல் போன்ற விவகாரங்கள், ஆளும் சிடியு கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தின. ஆளும்கட்சி மீதான மக்களின் அதிருப்தி வாக்குப்பதிவில் பிரதிபலித்தது. இதுவரை இல்லாத அளவுக்கு ஆளும் சிடியு கட்சி மோசமான சதவீத வாக்குகளை பெற்றது. 196 இடங்களை வென்ற அக்கட்சி 24.1 சதவீத வாக்குகளை பெற, இடதுசாரி கொள்கை கொண்ட சோஷியல் ஜனநாயக கட்சி 206 இடங்களில் வென்று 25.7 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. அதிக சதவீத வாக்கு பெறும் கட்சியே வெற்றி பெற்றதாக கணக்கில் கொள்ளப்படும் என்பதால் சோஷியல் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் ஆட்சி அமைக்க தேவையான வாக்குகளை எந்த கட்சிகளும் பெறவில்லை என்பதால் கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகி உள்ளது. அதுவரை மெர்கெல் பதவியில் நீடிப்பார். இதற்கிடையே, ஆட்சி அமைக்க சோஷியல் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஓலப் ஷோல்சும், சிடியு கட்சியின் அர்மின் லாஸ்செட்டும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். புதிய அரசு அமைய இன்னும் ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் கூட ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுடன் வலுவான உறவு

ஜெர்மனியில் ஆட்சி மாற்றம் குறித்து இந்தியாவுக்கான அந்நாட்டு தூதர் வால்டர் லிண்டர் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘பருவநிலை மாற்றம், உலக வெப்பமயமாதல், கொரோனா தடுப்பூசி, தீவிரவாதம் என எந்த ஒரு உலக பிரச்னையும் இந்தியா இல்லாமல் தீர்க்க முடியாது. இந்தியா எப்போதுமே ஜெர்மனிக்கு முக்கியமான நாடாகும். ஜெர்மனியில் அமையும் புதிய அரசும் இந்தியாவுடன் வலுவான உறவை தொடரும்’’ என நம்பிக்கை தெரிவித்தார்.

Related Stories: