முகச்சவரம் செய்ய தடை: ஆப்கானில் புதிய உத்தரவு

காபூல்: ஆப்கானில் முகச்சவரம் செய்வதற்கு தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.  ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் இடைக்கால அரசு அமைந்த பிறகு பெண்களுக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும் இஸ்லாமிய கட்டுப்பாடுகளை கடுமையாக விதித்து வருகிறது. இந்நிலையில், முகச்சவரம் செய்வது இஸ்லாமிய சட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளது. எனவே, முடி திருத்தும் கலைஞர்கள் ஷரியா சட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த தடையை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று அறிக்கை அனுப்பியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்திலுள்ள தலிபான் அமைப்பு அனைத்து முடித்திருத்தும் கலைஞர்களுக்கும் இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. இதே போன்று காபூலில் உள்ள முடிதிருத்துவோருக்கும் இந்த மாதிரியான உத்தரவு கிடைத்துள்ளதாக கூறியுள்ளனர்.

Related Stories: