கோஹ்லி 51, மேக்ஸ்வெல் 56 மும்பையை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி

துபாய்: மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 54  ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஆர்சிபி தொடக்க வீரர்களாக கேப்டன் கோஹ்லி, படிக்கல் களமிறங்கினர். படிக்கல் ரன் ஏதும் எடுக்காமல், பும்ரா வேகத்தில் விக்கெட் கீப்பர் டி காக் வசம் பிடிபட்டார். கோஜ்லி - ஸ்ரீகர் பாரத் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 68 ரன் சேர்த்தது. பாரத் 32 ரன் (24 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். அடுத்து கோஹ்லி - மேக்ஸ்வெல் ஜோடி சிறப்பாக விளையாடி 51 ரன் சேர்த்தது. கோஹ்லி 51 ரன்னில் (42 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழந்தார்.

மேக்ஸ்வெல் 56 ரன் (37 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பும்ரா வேகத்தில் போல்ட் வசம் பிடிபட்டார். டி வில்லியர்ஸ் 11, ஷாபாஸ் அகமது 1 ரன்னில் வெளியேற, ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன் குவித்தது. மும்பை பந்துவீச்சில் பும்ரா 3, போல்ட், ஆடம், ராகுல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய மும்பை அணி 18.1 ஓவரில் அனைத்து  விக்கெட்டையும்  இழந்து 111 ரன் எடுத்து 54 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

அதிகபட்சமாக ரோகித் சர்மா 43 ரன் விளாசினார்.  டி காக் 24 ரன், இசான் கிஷான் 9  ரன் எடுத்தனர். பெங்களூர் தரப்பில் ஹர்சல் படேல் 4 விக்கெட் , சாகல் 3  விக்கெட், மேக்ஸ்வெல் 2, சிராஜ் 1 விக்கெட் கைப்பற்றினர்.

Related Stories:

>