மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் மலைபோல் தேக்கமடையும் குப்பைகள்: கடும் துர்நாற்றத்தால் மக்கள் அவதி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகராட்சியில் தினந்தோறும் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம்பிரித்து அவற்றை பல்வேறு பகுதிகளில் உள்ள கிடங்குகளுக்கு எடுத்துச்சென்று உரமாக்கும் வேலையை நகராட்சி நிர்வாகம் செய்துவருகிறது. கடந்த 3 ஆண்டுகலாக மயிலாடுதுறை நகரில் பல்வேறு இடங்ளில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அங்கேயே மலைபோல் குவித்துவைக்கப்படுவதும் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் அவற்றை கொளுத்திவிடுவதும் வாடிக்கையாக இருக்கிறது.

நகரின் பல்வேறு சாலை மற்றும் வீதிகளில் ஆங்காங்கே 100க்கும் மேற்பட்ட இடங்களில் குப்பைகளை கொட்டிவைத்து அவற்றை பல வாரம் கழித்து அள்ளுவது வாடிக்கை, அதுவரை அப்பகுதியில் துர்நாற்றம் வீசிவருகிறது. பாதிக்கப்பட்டோர் இதுகுறித்து புகார் அளித்தால் நகராட்சி ஆணையர் கேட்பதில்லை, குப்பைகளை அப்புறப்படுத்த சமூக ஆர்வலர்கள் ஆணையரை தொடர்பு கொண்டால் அலட்சியமான பதிலை தெரிவிப்பது வாடிக்கையாக உள்ளது.

மயிலாடுதுறை தற்காலிக புதிய பேருந்து நிலையம் கீழ் புறத்தின் வழியாக நகராட்சி மேனிலைப்பள்ளி செல்வதற்கும், அப்பகுதியில் உள்ள காம்ப்ளக்சிற்கு சென்று வருகின்றனர். வணிக நிறுவனங்கள் உள்ள நடைபாதை வாசலில் குப்பைகளை கொட்டி வைத்துள்ளனர். அதிகாரிகளிடம் கேட்டால் குப்பைகளை இப்படித்தான் கொட்டுவோம், ஆணையரே இங்குதான் கொட்ட சொன்னார், நீங்களும் பல மாதமாக சொல்லிவருகிறீர்கள் இதனால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று பதில் கூறுகின்றனர்.

அதேபோன்று பேருந்து நிலையத்தை ஒட்டி உள்ள டாஸ்மாக் கடைக்கு செல்லும் வழியிலும் கழிப்பறைநீர் தேங்கி உள்ளது, இப்பகுதியில்தான் நகராட்சி அதிகாரிகள் பலமணிநேரம் இருந்து செல்வது வாடிக்கை, ஆனால் இந்த சாக்கடைக் கழிவை கண்டுகொள்வதில்லை, கேட்டாலும் முறையான பதில் கூறுவதில்லை. மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் மயிலாடுதுறை நகரில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்திற்கு முடிவு கட்டவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: