அமித்ஷா அறிவிப்பு; கூட்டுறவை பலப்படுத்த விரைவில் புது கொள்கை: சங்க எண்ணிக்கையை 3 லட்சமாக உயர்த்த முடிவு

புதுடெல்லி: ஒன்றிய அரசில் கூட்டுறவு துறைக்கு என தனி அமைச்சகம் கடந்த ஜூலை மாதம் உருவாக்கப்பட்டது. இத்துறை, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல் தேசிய கூட்டுறவு மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது. இதில், நாடு முழுவதும் பல்வேறு கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த 2,100 பிரதிநிதிகளும், ஆன்லைன் மூலமாக 6 கோடி பங்கேற்பாளர்களும் கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர் அமித்ஷா பேசுகையில், ‘‘தற்போது நாடு முழுவதும் 65,000 ஆக உள்ள கூட்டுறவு சங்கங்களின் எண்ணிக்கை அடுத்த 5 ஆண்டில் 3 லட்சமாக உயர்த்தப்படும்.

கூட்டுறவு சங்கங்கள் மாநில பட்டியலில் உள்ளபோது, ஒன்றிய அரசு இதற்கு தனியாக அமைச்சகம் அமைத்தது ஏன் என சிலர் சந்தேகம் கிளப்புகின்றனர். இதற்கு சட்ட ரீதியாக பதிலளிக்கப்படும். இத்துறையை நவீனப்படுத்தி பலப்படுத்தவே கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கப்பட்டது. இதில் மாநிலங்களுடன் ஒன்றிய அரசு இணைந்து செயல்படும். கூட்டுறவு சங்களுக்கான கொள்கையை கடந்த 2002ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அரசு வகுத்தது. இப்போது, மோடி அரசு புதிய கொள்கையை விரைவில் வெளியிட உள்ளது. நாட்டின் வளர்ச்சியில் கூட்டுறவு சங்கங்கள் பெரிய அளவில் பங்களிக்கின்றன,’’ என்றார்.

Related Stories: