கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளுக்கு சீனா தடை அறிவிப்பு எதிரொலி : பிட்காயின் மதிப்பு சரிந்தது!!

பெய்ஜிங்: கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளுக்கு சீன மத்திய வங்கி தடை விதித்துள்ளது. உலகளாவிய வர்த்தக முறையில் கிரிப்டோகரன்சி என அழைக்கப்படும் பிட்காயின் உள்ளிட்ட டிஜிட்டல் கரன்சிகளின் புழக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த டிஜிட்டல் கரன்சிகளை பல்வேறு சர்வதேச வணிக நிறுவனங்களும் ஏற்றுக் கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், பிட்காயின் உள்ளிட்ட அனைத்து கிரிப்டோகரன்சிகளும் அரசாங்கத்தால் வெளியிடப்படும் -பணம் இல்லை என்பதால் அதனை சந்தையில் புழங்க முடியாது என்றும் சீனாவின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கிரிப்டோகரன்சி தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளும் சட்ட விரோதமானவை என்று தெரிவித்துள்ள சீனா, அவற்றிற்கு தடை விதித்துள்ளது. சீனாவின் இந்த அறிவிப்பால் நேற்று பிட்காயின் மதிப்பு 5.5% வரை சரிந்தது.

Related Stories:

>