தமிழகம் முழுவதும் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி ரெய்டு: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல்லில் 44 ரவுடிகள் கைது.!

சென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தி வீட்டில் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் ரவுடிகளின் அராஜகத்தை ஒடுக்க வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.  துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா தலைமையில் நடந்த சோதனையில் ரவுடிகளின் வீட்டில் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் குற்றங்களை தடுக்க ரவுடிகளின் வீடுகளில் சோதனை மற்றும் விசாரணை நடத்தப்பட்டது.  குற்றச்சம்பங்களில் ஈடுபடாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகளை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். சென்னை புளியந்தோப்பில் உள்ள 50க்கும் மேற்பட்ட ரவுடிகளின் வீட்டில் காவல்துறை அதிகாரிகள் இரவில் அதிரடி சோதனை நடத்தினர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல்லில் 44, பெரம்பலூரில் 6 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்டத்தில் 36 ரவுடிகளை காவல் நிலையங்களுக்கு அழைத்து சென்று போலீஸ் விசாரணை  நடத்தினர்.  கன்னியாகுமரியில் ரெய்டு நடத்திய போலீசார் நன்னடத்தை விதிகளை மீறிய 39 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>