விநாயகர் சதுர்த்தி நிறைவு விழா ராஜகணபதிக்கு பாலாபிஷேகம்

சேலம் : சேலம் டவுனில் புகழ்பெற்ற ராஜகணபதி திருக்கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி கடந்த 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கியது. நடப்பாண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாததுடன், உற்சவர் ஊர்வலமும் நடத்தப்படவில்லை. அதேசமயம் நாள்ேதாறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, குமார கணபதி, லட்சுமி கணபதி, சிவன், பார்வதியுடன் கணபதி, சந்தனகாப்பு என விதவிதமான அலங்காரம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, 12ம் நாளான நேற்று, சதுர்த்தி நிறைவு விழா நடந்தது.

இதனையொட்டி ராஜகணபதிக்கு 1,008 லிட்டர் பாலை கொண்டு அபிஷேகம் நடந்தது. மேலும், இளநீர், சந்தனம், தயிர், பஞ்சாமிருதம், விபூதி ஆகியவற்றாலும் அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து பட்டாடை உடுத்தி, மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, லட்சார்ச்சனை நடந்தது. பக்தர்கள் கோயிலின் வெளியில் இருந்தபடியே சுவாமியை தரிசனம் செய்து சென்றனர்.

Related Stories: