தருமபுரி அருகே கர்ப்பிணிபெண் தூக்கிட்டு தற்கொலை: இறப்பில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்த மானியதஅள்ளி மலைப்ப நகர் பகுதியை சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவருக்கும், சேலம் மாவட்டம், ஒமலூர் அடுத்த வெங்காயனூரை சேர்ந்த பவித்ரா பி.இ.,பட்டதாரி பெண் இவர்கள் இருவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.  இந்த நிலையில் வனிதா 4 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். மேலும் மாணிக்கவாசகம் ராணுவத்தில் இருப்பதாக கூறி திருமணம் செய்துள்ளார். ஆனால் திருமணம் முடிந்து பணிக்கு செல்லவில்லை. இந்நிலையில் வரதட்சனை கேட்டு வனிதாவை அடிக்கடி மாணிக்கவாசகம் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. நேற்று வனிதாவின் தாய் மாதம்மாள் மகளை பார்க்க சென்றுள்ளார்.

அப்போது தாய், மகள் இருவரையும் மாணிக்கவாசகம் அடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு வனிதா வீட்டின் அருகே உள்ள குளியல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளதை அருகே இருந்தவர்கள் பார்த்து தொப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை மீட்டு  தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வனிதா இறந்த விவரம் அறிந்த உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது ஊருக்கு செல்லும் வழியில் காட்டு பகுதியில் ஆம்புலன்ஸ் நின்றுள்ளது. அந்த ஆம்புலன்ஸை நிறுத்தி விட்டு, ஒட்டுநர் மது அருந்தி இருந்துள்ளனர்.

இதனை கண்ட உறவினர்கள், அதிர்ந்த போய், முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனை வனிதாவின் உடல் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். ஆனால் மாணிக்கவாசகம் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் வரவில்லை. இதனால் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் அவரசமாக உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றதாக தொப்பூர் டோல்கேட் அருகே உடலை கொண்டு சென்ற ஆம்புலன்சை தடுத்து நிறுத்தை சுற்றி வலைத்து தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அப்போது சிலர் ஆம்புலன்ஸ்சின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். இதனையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தையின் பேரில் ஆம்புலன்சை விடுவித்து வனிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மீண்டும் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள் இறப்பில் சந்தேகம் உள்ளாக, மாணிக்கவாசகம் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அரசு மருத்துவமனை முன்பு அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போழுது காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் போராட்டக்காரர்கள் சம்மதிக்காததால், காவல் துறையினர் குண்டு கட்டாக தூக்கி வண்டியில் ஏற்றி கைது செய்தனர். அப்போது காவல் துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து காவல் துறையினரையை  கண்டித்து முழக்கங்களை எழுப்பியும், சாலையில் படுத்தும், வாகனத்தை தடுத்து, கைது செய்தவர்களை விடுவிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த சாலை மறியலால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Related Stories:

>