பழநியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்

பழநி : பழநியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பழநி நகரில் 33 வார்டுகள் உள்ளன. இதில் தெரசம்மாள் காலனி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இப்பகுதியில் உள்ள போர்வெல்களும் பழுதடைந்துள்ளன. இதனால் குடிநீர் மற்றும் இதர பயன்பாடுகளுக்கு தண்ணீரின்றி இப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் நேற்று குடிநீர் பிரச்சனையை சரிசெய்ய வலியுறுத்தி உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் தெரசம்மாள் காலனி மக்கள் காலிக்குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்டவர்களுடன் நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குடிநீர் பைப்லைன் மற்றும் போர்வெல்களை உடனடியாக சரிசெய்வதாக நகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனைத்தொடர்ந்து மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். திடீர் மறியலால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Related Stories: