ரஷ்ய பல்கலைக்கழகத்தில் மர்மநபர் துப்பாக்கி சூடு: 8 மாணவர்கள் பலி

மாஸ்கோ: ‘ரஷ்ய பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தில் 8 மாணவர்கள் உயிரிழந்தனர்’. ரஷ்யாவில் துப்பாக்கி வாங்குவதற்கு சட்டப்படி கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் வேட்டை துப்பாக்கிகளை எளிதாக பெற முடியும். இந்நிலையில், ரஷ்யாவின் பெர்ம் பல்கலைக்கழகம் நேற்று வழக்கம் போல் இயங்கிக்கொண்டு இருந்தது. அடையாளம் தெரியாத மாணவர் ஒருவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்துக்குள் நுழைந்து தனது கையில் இருந்த துப்பாக்கியால் அங்கிருந்த மாணவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார். இதனால் மாணவர்கள் அலறியடித்து கூச்சலிட்டபடி சிதறி ஓடினர்.

மேலும் ‘சில மாணவர்கள் வகுப்பறைகளுக்குள் சென்று அறைக்கதவை தாழிட்டு கொண்டனர். அச்சத்தில் உறைந்த சில மாணவர்கள் வகுப்பறை ஜன்னல் வழியாக வெளியே கீழே குதித்து தப்பித்தனர்’. மாணவர் கண்மூடித்தனமாக சுட்டதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கி சூடு நடத்திய மாணவனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories:

>