லக்சம்பர்க் ஓபன் கிளாரா சாம்பியன்

லக்சம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், 18 வயது இளம் வீராங்கனை கிளாரா டாசன் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் லாட்வியாவை சேர்ந்த நடப்பு சாம்பியன் ஜெலனா ஓஸ்டபென்கோவுடன் (24 வயது, 29வது ரேங்க்) மோதிய கிளாரா (டென்மார்க், 52வது ரேங்க்) 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த ஓஸ்டபென்கோ 6-4 என வென்று பதிலடி கொடுக்க, சமநிலை ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, 3வது செட்டில் அனல் பறந்தது. இரு வீராங்கனைகளும் சளைக்காமல் புள்ளிகளைக் குவித்து முன்னேறிய நிலையில் ஓஸ்டபென்கோவின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த கிளாரா 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் 2 மணி, 3 நிமிடம் போராடி வென்று தனது 2வது டபுள்யு.டி.ஏ சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஆகஸ்டில் நடந்த சிகாகோ டபுள்யு.டி.ஏ 125 தொடரின் பைனலில் இவர் இங்கிலாந்தின் எம்மா ரடுகானுவை வீழ்த்தி தனது முதலாவது சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

* ஜாஸ்மின் அசத்தல்

ஸ்லோவேனியாவில் நடந்த போர்ட்டோராஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பைனலில், இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவோலினி (25 வயது, 64வது ரேங்க்) 7-6 (7-4), 6-2 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் அலிசான் ரிஸ்கியை (31 வயது, 32வது ரேங்க்) வீழ்த்தி முதல் முறையாக டபுள்யு.டி.ஏ சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார்.

Related Stories: