ராயக்கோட்டை அருகே புலிகுத்தப்பட்டான் நடுகல் கண்டுபிடிப்பு

தேன்கனிக்கோட்டை : ராயக்கோட்டை அருகே 13ம் நூற்றாண்டை சேர்ந்த புலிகுத்தப்பட்டான் நடுகல்லை வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, கெலமங்கலம்-ராயக்கோட்டை சாலையில் உள்ள அடக்கம் என்ற கிராமத்தில், அறம் வராலற்று ஆய்வு மையம் தலைவர் அறம் கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் வரலாற்று ஆய்வு மேற்கொண்டபோது, மாரியம்மன் கோயிலை ஒட்டி மூன்று நடுகற்கள் உள்ளன.

அதில் இரண்டு நடுகற்கள் புலிகுத்தப்பட்டான் நடுகல்லாகவும், மற்றொன்று சதி நடுகல்லாகவும் உள்ளன. முதல் நடுகல்லில் வீரனின் வலதுகரத்தில் நீண்ட வாளும் இடது கரத்தில் உள்ள குறுவாளானது புலியின் தலையில் குத்தப்பட்டு காதுபுரத்திற்கு வெளியே தெரியும் படி உள்ளது. நடுகல் வீரனின் இடையிலும் பெரிய வாள் தொங்கவிடப்பட்டுள்ளது. அருகில் அவனது மனைவியின் சிற்பம் கையில் மதுகுடுவையுடன் இருப்பதை பார்க்க முடிகிறது. இரண்டாவது நடுகல்லும் இவ்வாறே செதுக்கப்படுள்ளது. ஆனால் இதுவரை கண்டறியப்படாத நடுகல் சிற்பங்களில் இப்படி ஒரு வடிவமைப்பு இல்லை.

எல்லா நடுகல்லிலும் புலி தாக்கவரும் சிற்பம் கண்டிப்பாக இருக்கும். ஆனால் இந்த நடுகல் சிற்பத்தில் வீரனை தாக்க வரும் புலியானது தான் ஏற்கவே வேட்டையாடி கொன்ற மிருகத்தை ஆடு அல்லது மான் தனது 2 முன்னங்கால்களில் பிடித்தபடி நடுகல் வீரனை தாக்குவது போல் சிற்பம் செதுக்கப்பட்டிருப்பது வியப்பாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. நடுவில் வீரனின் தலைபகுதியில் பின் பகுதியில் காடு இருப்பது போன்ற வளமை குறியீடு சின்ன கோடுகளாக செதுக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு இல்லாததால் சிதிலமடைந்த நிலையில் உள்ளன.

மூன்றாவது நடுகல் சிற்பத்தில் ஒரு பெண் சிற்பம், இரண்டு ஆண் சிற்பம் ஒன்று பெரியதாகவும், ஒன்று சிறியதாகவும் உள்ளது. குழு தலைவனாக இருக்க வேண்டும். 13 அல்லது 14ம் நூற்றாண்டுகளை சேர்ந்ததாக இருக்க வேண்டும். ஒரு ஆள் நுழையும் அளவே இடவசதி உள்ளது. அதே பகுதியில் பழமை வாய்ந்த சிவன் கோயிலில் மூன்றரை அடி உயரமுள்ள சிவலிங்கம் உள்ளது. பராமரிப்பு இல்லாததால் கோயில் சிதிலமடைந்து காணப்படுகிறது.

Related Stories: