விபத்தில் சிக்கிய தம்பதியை காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அமைச்சர்

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரிக்கரை அருகே சாலை விபத்தில் சிக்கி மயங்கி கிடந்த வயதான தம்பதியை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் காரில் ஏற்றிச் சென்று மருத்துவமனையில் ேசர்த்தார்.  கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே சுவாமி சகஜானந்தா நகரை சேர்ந்தவர் சேகர்(62). இவரது மனைவி சுலோச்சனா(58). இருவரும் நேற்று மணல்மேட்டில் உள்ள சர்ச்சுக்கு பைக்கில் சென்றனர். அப்போது எதிர்புறத்தில் வந்த இருசக்கர வாகனம் மோதி பலத்த காயம் அடைந்த தம்பதியர் சாலையில் மயங்கி கிடந்தனர்.   

அந்த வழியாக சென்ற தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் காரை நிறுத்தி பார்வையிட்டார். தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த சுலோச்சனா மற்றும் லேசான காயங்களுடன் இருந்த சேகர் ஆகியோரை தனது பாதுகாப்புக்கு வந்த காரில் ஏற்றி காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்றார்.

Related Stories:

>