3வது அலையை எதிர்கொள்ள தமிழ்நாடு முழுவதும் 2ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது: சென்னையில் மட்டும் 1,600 தடுப்பூசி முகாம்கள்..!!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 2ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது. தமிழகத்தில் கொரோனா 2வது அலை கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் 3வது அலையை எதிர்கொள்ள தமிழக அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

கடந்த 12ம் தேதி தமிழகம் முழுவதும் முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அன்று மட்டும் கிட்டத்தட்ட 28 லட்சத்துககும் அதிகாமானோர் பேர் தடுப்பூசி போட்டு கொண்டனர். இது நிர்ணயிக்கப்பட்ட 20 லட்சத்தை விட அதிகம். மக்களும் தடுப்பூசி முகாமுக்கு பெரும் வரவேற்பு தெரிவித்த நிலையில் 2வது கட்டமாக தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, இன்று காலையில் தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கான மெகா முகாம்கள் இயங்க ஆரம்பித்து உள்ளன.

மேலும், இன்று மட்டும் கிட்டத்தட்ட 30 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட தமிழக அரசு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் 1600 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி உள்ளன.

இதனையடுத்து, ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 20 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ளாத 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

Related Stories: