எமிரேட் நிறுவனத்தில் 3,500 பேருக்கு வேலை வாய்ப்பு

துபாய்: கடந்த 2 ஆண்டுகளாக கொரானா அச்சுறுத்தல் காரணமாக, உலகம் முழுவதும் பெரும்பாலான விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தன. நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எடுத்தன. தற்போது,  பல நாடுகளில் கொேரானாவின் தாக்கம் குறைந்துள்ளதால், மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளது.இந்நிலையில், துபாயை தலைமையிடமாக கொண்டு இயங்கும் உலகின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான, ‘எமிரேட்ஸ் நிறுவனம்’, 3,500 பேரை புதிதாக வேலையில் அமர்த்த உள்ளது. நீண்ட விடுமுறையில் அனுப்பப்பட்ட ஊழியர்களையும் மீண்டும் அழைத்துள்ளது. www.emiratesgroupcareers.com  என்ற வலைதளத்தில் இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பங்களை பெறுகிறது.

Related Stories:

>