சென்னை மயிலாப்பூரில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை: கடலூர் நீதிமன்றத்தில் 4 பேர் சரண்

கடலூர்: சென்னை மயிலாப்பூரில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கடலூர் நீதிமன்றத்தில் 4 பேர் சரண் அடைந்தனர். சென்னை மந்தவெளியை சேர்ந்தவர் கோபி என்ற உருளை கோபி (39). இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். ஆவின் பால் விற்பனை கடையும் நடத்தி வந்தார். கடந்த 14ம் ேததி இரவு கோபி மயிலாப்பூர் அப்பு தெருவில் தனது நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கோபியை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதில் கோபி இறந்தார். இதுகுறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கொலை செய்து தப்பி ஓடிய 4 பேரை தேடி வந்தனர். இதற்கிடையே இந்த கொலை வழக்கு தொடர்பாக 4 பேர் கடலூர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர். நீதிமன்ற உத்தரவின்பரில் சரணடைந்த சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சரவணன்(40), கலைஅரசன்(27), திருவள்ளூர் மாவட்டம் மணலி சேர்ந்த சுரேஷ்(40), சென்னை ராஜா அண்ணாமலைபுரம் சேர்ந்த பார்த்திபன்(25) ஆகியோர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: