தொடர் குற்றச்செயல் 2 பேருக்கு குண்டாஸ்

ஸ்ரீபெரும்புதூர்: கொலை, கொலை மிரட்டல், அடிதடி உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள பிரபல ரவுடிகள் 2 பேரை, குண்டர் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைக்க,   காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.ஸ்ரீ பெரும்புதூர் அருகே கிளாய் கிராமம், திருவீதியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் குள்ளா விஸ்வா (எ) விஸ்வநாதன் (32). ஸ்ரீ பெரும்புதூர், விஆர்பி சத்திரத்தை சேர்ந்தவர் முருகன் (எ) ஸ்டாலின் (33). இவர்கள் மீது ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் உள்பட பல காவல் நிலையங்களில் கொலை, கொலை மிரட்டல், அடிதடி, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த மாதம் மேற்கண்ட 2 பேரையும் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் 2 பேரையும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரி எஸ்பி  சுதாகர், கலெக்டர் ஆர்த்திக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய, கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.

Related Stories:

>