காதலிக்க மறுத்த ஆசிரியை வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி

பெரம்பலூர்: பெரம்பலூர், பாரதிதாசன் நகரில் வசிப்பவர் நீலகண்டன்(26). ரவுடி.இவர், ஆசிரியையான 23 வயது இளம்பெண்ணை காதலித்துள்ளார். அதை ஏற்க ஆசிரியை மறுத்துவிட்டார். இதையடுத்து நேற்றுமுன்தினம் நள்ளிரவு  நண்பருடன், ஆசிரியை வீட்டுக்கு சென்ற நீலகண்டன், வீட்டு வாசலில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். பின்னர் ஆசிரியை, அவரது தந்தையை பட்டாக்கத்தியை காட்டி மிரட்டிவிட்டு சென்றார். புகாரின்பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>