ஜடேஜாவின் பதவி ஆசை

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட எம்.எஸ்.தோனி, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக தொடர்கிறார். நடப்பு தொடரில் அணி கணிசமான வெற்றிகளைப் பெற்றாலும், தோனி இயல்பாக விளையாடி ரன் குவிக்க முடியாமல் தடுமாறினார். அதனால் இந்த தொடருடன் தோனி ஓய்வு பெற்று விடுவார் என்ற பேச்சு எழுந்துள்ளது. இந்நிலையில், சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக யாரை தேர்வு செய்வீர்கள் என்று சமூக ஊடகமொன்றில் ஜடேஜாவிடம் ரசிகர் ஒருவர் கேள்வி எழும்பினார். அதற்கு ஜடேஜா ‘8’ என்று பதில் அளித்தார். சென்னை அணியில் அவரது சீருடை எண் ‘8’. அதனால் அவர் சென்னை அணியின் அடுத்த கேப்டனாக ஆசைப்படுவது வெளிச்சத்துக்கு வந்தது. சிறிது நேரத்தில் தனது பதிவை ஜடேஜா நீக்கி விட்டாலும், ரசிகர்கள் அதை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Related Stories:

>