3 விதமான கிரிக்கெட்டிலும் கோலி தான் இந்திய அணியின் கேப்டன்: புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்தது பிசிசிஐ

டெல்லி: மூன்று பார்மெட்டுக்கும் விராட் கோலி தான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் என்று கேப்டன் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பிசிசிஐ பொருளாளர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விரைவில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் பார்மெட்டில் இந்தியாவை வழிநடத்தும் பொறுப்பில் இருந்து விலக உள்ளதாகவும். அதன் பிறகு ரோகித் ஷர்மா இந்தியாவின் ஷார்டர் பார்மெட் கிரிக்கெட் கேப்டனாக செயல்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தனர். டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்த மாற்றம் இருக்கும் எனவும் சொல்லப்பட்டது.

ஆனால் அதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொருளாளர் அருண் துமால்.

இதெல்லாம் மிகவும் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. இது ஒரு வதந்தி. அவ்வளவு தான். கேப்டன் பொறுப்பு விவகாரம் குறித்து எதுவும் கலந்தாலோசிக்க படவில்லை. மூன்று பார்மெட் கிரிக்கெட்டிலும் கோலி தான் இந்திய அணியின் கேப்டன்” என அவர் தெரிவித்துள்ளார். ஆனால் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டி உள்ள காரணத்தினால் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என சொல்லி கோலியே விலகி விடுவார் என்றெல்லாம் சொல்லப்பட்டு வருகின்றன.

Related Stories: