மேற்கு வங்க வன்முறை சிபிஐ விசாரணை தீவிரம்: மேலும் 7 பேர் கைது

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலின் முடிவு, கடந்த மே மாதம் 2ம் தேதி வெளியானது. இதில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 3வது முறையாக வெற்றிப் பெற்று ஆட்சியை பிடித்தது. இத்தேர்தலில் பாஜ.வுக்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதனால், தேர்தல் முடிவுகள் வெளியான அன்றிரவு முதல் திரிணாமுல் காங்கிரசார் மாநிலம் முழுவதும் நடத்திய வன்முறையில் பாஜ நிர்வாகிகள் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த சம்பவங்கள் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இதுவரை 30க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ள அது, குச்பிஹார் உள்ளிட்ட இடங்களில் நடந்த கொலைகள் தொடர்பாக நேற்று 7 பேரை கைது செய்தது. இதன்மூலம், இந்த வன்முறைகள் தொடர்பாக சிபிஐ கைது செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 10ஐ தாண்டியுள்ளது.

Related Stories: