சட்டப்பேரவையில் புலவர் புலமைப்பித்தனுக்கு இரங்கல்

சென்னை: புலவர் புலமைப்பித்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சட்டப்பேரவையில் நேற்று இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது சபாநாயகர் அப்பாவு பேசுகையில், ‘‘புலவர் புலமைப்பித்தன் 1980, 1983ம் ஆண்டுகளில் தமிழக சட்ட மேலவை துணை தலைவராக சிறப்பாக பணியாற்றினார். மேலும் தமிழக அரசின் பெரியார் விருதை பெற்ற பெருமைக்குரியவர். அவரின் மறைவால் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இப்பேரவை தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறது’’ என்றார். தொடர்ந்து புலவர் புலமைப்பித்தன் மரியாதை செலுத்தும் வகையில் உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று அமைதி காத்தனர்.

Related Stories: