காரியாபட்டி அருகே ட்ரோன் மூலம் பூச்சிமருந்து தெளிப்பு: விவசாயிகள் வரவேற்பு

காரியாபட்டி: காரியாபட்டி அருகே  ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் புதிய முறை காரியாபட்டி பகுதி விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. காரியாபட்டி அருகே மேலத்துலுக்கன்குளம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் பெங்களூர் தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தில் மென்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயத்தை செய்துவரும் நிலையில் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே உழவு, விதைப்பது  உள்ளிட்ட விவசாய வேலைகளுக்கு இயந்திரங்களின் துணை கொண்டு விவசாயத்தை செய்து வந்தநிலையில், செடிகளுக்கு பூச்சி மருந்து தெளிக்க ஆள் கிடைகாத பட்சத்தில் செலவு அதிகரிப்பதோடும், கால விரயம் ஏற்படுகிறது.

தற்போது சுமார் 40  ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளமும், பருத்தி, கத்தரிக்காய், உழுந்து, பாசிபயறு உள்ளிட்ட பயிர்களை கிருஷ்ணகுமார் போட்டுள்ளார். இதில்  மக்காச்சோளத்தை தாக்கும் அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்கப்படுகிறது. 3 கிலோ மீட்டர் தூரம் வரை பறக்கும் திறன் கொண்ட இந்த ட்ரோன் மூலம், ஒரு நாளைக்கு 40 எக்கர் பரப்பளவிலான பயிர்களுக்கு மருந்து தெளிக்கலாம். குறைந்த செலவில், வேலை விரைவாக முடிவதால்,இந்த முறைக்கு விவசாயிகள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்த டிரோனை மானிய விலையில் வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். காரியாபட்டி வேளாண் உதவி இயக்குனர் செல்வராணி, துணை வேளாண்மை அலுவலர் தெய்வம், உதவி வேளாண்மை அலுவலர் நாகராஜன், சமூக ஆர்வலர் ரெங்கசாமி உள்ளிட்ட விவசாயிகள், பொதுமக்கள் இருந்தனர்.

Related Stories: