உத்திரமேரூரில் ஒரே நாளில் 2,286 பேருக்கு கொரோனா தடுப்பூசி

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மானாம்பதி, சாலவாக்கம், படூர், குருமஞ்சேரி, களியாம்பூண்டி, படூர் மற்றும் உத்திரமேரூர் உள்ளிட்ட ஆறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் சுகாதாரத்துறையினருடன் இணைந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் 6 ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நடைப்பெற்றது. இதில் நேற்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் மற்றும் கிராமவாசிகள் என 2,286 பேர் ஆர்வத்தோடு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதில் வட்டார மருத்துவ அலுவலர் உமாதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கராஜ், வேல்முருகன் மற்றும் சுகாதார பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மதுராந்தகம்: தமிழக அரசு தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு கட்டுமான உடலுழைப்பு தொழிலாளர்கள் நல மத்திய ஐக்கிய சங்கம் மற்றும் அப்போலோ மருத்துவமனைஆகியவை இணைந்து, கொரோனா தடுப்பூசி இலவச மருத்துவ முகாமை செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சிஎஸ்ஐ பள்ளி வளாகத்தில் நடத்தியது. இதில், தொழிலாளர் உதவி ஆணையர் ஆ.செண்பகராமன், உதவி ஆய்வாளர் த.பொன்னிவளவன், கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் வி.ஜே.குமார், செயலாளர் எம்.எல்.ராஜசேகர், பொருளாளர் ஏ.ஜான் விஜயகுமார், ஒருங்கிணைப்பாளர் தங்கபெரு. தமிழமுதன், துணை தலைவர் கே.இ.கண்ணன், செயலாளர் ஜி.பழனி, மாநில செயற்குழு தலைவர் எஸ்.அர்ஜுனன், உறுப்பினர் அய்யனார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், மதுராந்தகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Related Stories: