பெரணமல்லூர், செய்யாறு அருகே பெருமாள், அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்

பெரணமல்லூர்: பெரணமல்லூர் அடுத்த நல்லடிசேனை கிராமத்தில் பழமை வாய்ந்த பெருமாள் கோயில், மாரியம்மன் ேகாயில்கள் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் யாகசாலை அமைக்கப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, நேற்று அதிகாலை கோ பூஜை, கஜ பூஜை, தம்பதி பூஜை மற்றும் 2ம் கால யாக பூஜைகள் நடந்தது. பின்னர், மகா சங்கல்பம், மகா பூர்ணாஹூதியும், தொடர்ந்து புனிதநீர் கலசங்கள் கொண்டு செல்லப்பட்டு, பெருமாள் கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, மூலவருக்கும் புனிதநீர் ஊற்றி மகா தீபாராதனை நடந்தது. அதேபோல், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். செய்யாறு: செய்யாறு அடுத்த காழியூர் கிராமத்தில் எல்லை தெய்வமான செக்கட்டியம்மன் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, கோயிலில் யாகசாலை அமைத்து சென்னை காளிகாம்பாள் கோயில் பிரதான அர்ச்சகர் காளிதாஸ் தலைமையிலான சிவாச்சாரியர்கள் பல்வேறு சிறப்பு பூஜைகளை செய்து, கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

இதேபோல், செய்யாறு அடுத்த வடதண்டலம் கிராமத்தில் உள்ள எறையாத்தம்மன் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கும்பாபிஷேக விழாக்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Related Stories: