லண்டன்: இந்திய அணியுடனான 4வது டெஸ்டில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது.ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச... இந்தியா முதல் இன்னிங்சில் 191 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து, முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன் எடுத்திருந்தது. மலான் 26, ஓவர்ட்டன் 1 ரன்னுடன் நேற்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஓவர்ட்டன் மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் உமேஷ் வேகத்தில் கோஹ்லி வசம் பிடிபட்டார். மலான் 31 ரன்னில் வெளியேற (67 பந்து, 5 பவுண்டரி), இங்கிலாந்து 62 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது.