பாலக்காட்டில் வெளுத்து வாங்கிய கன மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பாலம்

பாலக்காடு :  கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு அருகே உள்ளது காஞ்ஞிரப்புழா மற்றும் அட்டப்பாடி. மேற்கு தொடர்ச்சி மலைஅடிவாரப்பகுதியான இங்கு நேற்று பலத்த மழை வெளுத்து வாங்கியது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது.

இது தவிர மன்னார்காடு, பவானி, காஞ்ஞிரப்புழா, குந்திப்புழா ஆகிய, ஆறுகளில் மழைவெள்ளம்  கரைப்புரண்டு ஓடுகிறது. காஞ்ஞிரப்புழா பூஞ்சோலை ஓடக்குன்று நதிப்பாலம் மழைவெள்ளத்தால் அடித்துசெல்லப்பட்டது.

இதனால் காஞ்ஞிரப்புழா - மன்னார்காடு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு வசிக்கின்ற 70 குடும்பத்தினரை பள்ளிக்கூடங்களில் தங்குவதற்கு மாவட்டநிர்வாகம் ஏற்பாடுகள் செய்துள்ளது. இப்பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பூஞ்சோலை பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 7 பைக்குகள், சிறுகனரக வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. தோட்டப்பயிர்கள் அனைத்து இடங்களிலும் மழைவெள்ளம் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

 சாலையோரங்களில்  வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட பாறைகள், சதப்பு மண்கள் சூழ்ந்துள்ளது. இதுவிர உயிர் சேதம்  எதுவும் ஏற்படவில்லை என்று பேரிடர் நிவாரண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மழைவெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ள இடங்களிலுள்ள மக்களை மாற்று இடங்களுக்கு மீட்டு வருகிறார்கள். தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்புக்குழுவினர், போலீசார், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் முகாமிட்டு வேண்டிய நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

Related Stories: