கொடைக்கானலில் தூண் பாறை, குணா குகை உள்ளிட்ட இடங்கள் திறப்பு

* சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல் :  கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தூண் பாறை, குணா குகை, பைன் பாரஸ்ட் திறக்கப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், ெகாடைக்கானலை பொறுத்தவரை கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு, பிரையண்ட் பார்க் உள்ளிட்ட 3 பூங்காக்கள், ஏரியில் படகு சவாரி செல்ல மட்டுமே சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

நேற்று முதல் கொடைக்கானல் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் பாயிண்ட், மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம், ஏரி ஆகியவை திறக்கப்பட்டன. பல மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட இத்தலங்களை நேற்று சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியுடன் கண்டு களித்தனர்.

Related Stories: