ஆற்றில் அடித்து சென்ற அரசு பஸ் சிக்கி தவித்த 25 பயணிகள் மீட்பு: தெலங்கானாவில் பரபரப்பு

திருமலை: தெலங்கானா மாநிலம், ராஜண்ண சிறிசில்லா மாவட்டம், கம்பீரவுப்பேட்டை- லிங்கண்ணப்பேட்டை இடையே அம்மாநில அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் வழக்கம் போல் நேற்று முன்தினம் மாலை லிங்கண்ணப்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தது. மன்னேரு ஆற்று கால்வாய் பாலத்தில் சென்றபோது திடீரென வெள்ளம் அதிகரித்து பாலம் மூழ்கியது. பஸ்சும் வெள்ளத்தில் சிக்கியது. பயணிகள் அலறி கூச்சலிட்டனர். உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கலெக்டர் கிருஷ்ண பாஸ்கர் தலைமையிலான அதிகாரிகள் விரைந்து வந்து, ஜேசிபி இயந்திரம் மூலம் பயணிகளை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பஸ்சில் இருந்த 25 பயணிகள், டிரைவர், நடத்துனர் ஆகியோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து, பஸ்சை கயிறு கட்டி இழுத்தனர். முடியவில்லை. வெள்ளம் அதிகரித்தபடியே இருந்ததால் இந்த முயற்சி ேதால்வியில் முடிந்தது. மேலும், நேற்று அதிகாலை வெள்ளப்பெருக்கு அதிகரித்து அரசு பஸ் அடித்து செல்லப்பட்டது.

Related Stories: