கிருஷ்ண ஜெயந்தி விழா பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

கரூர் : கோகுலாஷ்டமி எனப்படும் கிருஷ்ணஜெயந்தி விழாவினை அனைத்து கோயில்களிலும் விசேஷ பூஜைகள் நடைபெற்றன.தமிழகத்தில் இந்துக்களின் முக்கிய பண்டிகையான கிருஷ்ணஜெயந்தி விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான வீடுகளில் சுத்தம் செய்து, கோலமிட்டு சுவாமி தரிசனம் செய்யப்பட்டது.

இதேபோல், தாந்தோணிமலை பெருமாள் கோயில் உட்பட முக்கிய பெருமாள் கோயில்களிலும் கிருஷ்ணஜெயந்தி விழாவினை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்வுகள் நடைபெற்றன. இதே போல் கரூர் மாவட்டம் தண்ணீர்பந்தல்பாளையத்தில் உள்ள நவநீத கிருஷ்ணன் ஆலயத்திலும் சுவாமி சிலை அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த பகுதியினர் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

வீடுகளிலும் சரி, கோயில்களிலும் சரி, கோகுலாஷ்டமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பக்தர்கள் வரத்தின்றி கோயில்களிலும், உறவினர்கள் வருகையின்றி வீடுகளிலும் இந்த நிகழ்வுகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: