தீவிரமடையும் மேகதாது அணை பிரச்னை!: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 13வது ஆலோசனை கூட்டம் தொடங்கியது..!!

டெல்லி: மேகதாது அணை பிரச்னை தீவிரமடைந்துள்ள நிலையில், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 13வது ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு உட்பட்ட சேவாபவனில் தொடங்கியுள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைகூட்டம் தொடங்கியிருக்கிறது.

இதன் தற்காலிக தலைவராக இருக்கக்கூடிய எல்.கே.ஹல்தர் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் என்பது நீண்ட நாட்களுக்கு பிறகு நேரடியாக தொடங்கியிருக்கிறது. இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை செயலாளர் மற்றும் கூடுதல் தலைமை செயலாளராக இருக்கக்கூடிய சந்தீப், காவிரி தொழில்நுட்ப தலைவராக இருக்கக்கூடிய சுப்பிரமணியன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துக் கொண்டிருக்கின்றனர்.

இதேபோன்று கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய பிற மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இன்றைய கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி தரக்கூடாது என வலியுறுத்தப்படலாம். தமிழ்நாட்டிற்கான நீர்பங்கீடு குறித்தும் காவிரி ஆணைய கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட உள்ளது.

Related Stories: