பெரம்பலூர் அருகே எசனை கிராமத்தில் மர்ம விலங்கு கடித்து ஆடு, கன்று குட்டி பலி-மீண்டும் சிறுத்தை நடமாட்டமா? பொதுமக்கள் அச்சம்

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே எசனை கிராமத்தில் மர்ம விலங்கு கடித் துகுதறியதில் 1ஆடு, 1கன் றுக்குட்டி பலி. மற்றொரு கன்றுக்குட்டி உயிர்ஊசல். வனத்துறை நேரில் விசார ணை. மீண்டும் சிறுத்தை யாக இருக்குமோ...? 8ஆண் டுகளுக்குப்பிறகு மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.பெரம்பலூர் அருகேயுள்ள எசனை கிராமத்தில் வசிப்பவர் ராமசாமி மகன் சண்முகம்(51). இவர் தனது வீட்டைஒட்டிய வயல் பகுதியில் கொட்டகை அமைத்து அதில் ஆடு, மாடு களை வளர்த்து வருகிறார். இந்திலையில் நேற்று காலை வயலில் உள்ள கொட் டகைக்குச் செல்லும் வழியிலேயே மர்ம விலங்கு கடித்துக் குதறியதால் பலியான ஆட்டின் உடல் வயல் வரப்பு ஓரத்தில் கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே பதறியடித்து சத்தமி ட்டவாறே கொட்டகைக்கு ஓ டிப்போய் பார்த்தபோது அங்கே கட்டிவைத்திருந்த 2 கன்றுக்குட்டிகளும் மர்ம விலங்கு கடித்ததில் குடல் வெளியேறிய நிலையில், ஒன்று இறந்தபடியும், மற்றொன்று உயிருக்குப் போ ராடிய நிலையிலும் இருப்பது கண்டு கண்ணீர் வடித்தார். உடனே எசனையிலு ள்ள கால்நடை மருத்துவர் பால முருகன் வரவழைக்க ப்பட்டு உயிருக்குப் போரா டிய கன்றுக்குட்டிக்கு வயிற்றில் தையல்போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்தவுடன் பெரம்பலூர் மாவட்ட வனஅலுவலர் குகனேஷ், வனச்சரக அலுவலர் சசிக்குமார், வனவர்கள் பிரதீப், குமார், வனக்காப்பாளர் செல்வக் குமாரி ஆகியோர் எசனை கிராமத்திற்கு நேரில் சென்று இறந்து கிடந்த ஆடு, கன்றுக்குட்டி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்ட மற்றொரு கன்றுக்குட்டி ஆகியவற்றை பார்வையிட்டு சண்முகத்திடம் சம்பவம் குறித்து விசாரணை செய்தனர். சண்முகம் கொட்டகையில் கட்டிவைத்திருந்த ஆடு, கன்றுக்குட்டிளை மர்ம விலங்கு கடித்துக் குதறிய சம்பவம் அறித்து ஊர்மக்கள் ஓடிவந்து அதிர்ச்சியுடன் பார்த்து சென்றனர். மர்ம விலங்கு அருகிலுள்ள மலையிலிரு ந்து வந்திறங்கிய சிறுத்தையாக இருக்குமோ என அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பெரம்பலூர் வனச்சரகர் சசிக்குமாரிடம் கேட்டபோது, சிறுத்தை கூட்டமாக ஆடு, மாடு இருந்தாலும் ஒன்றை மட்டுமே கவ்விச் செல்லும், அங்கேயே கடித்துக் குதறாது. இது ஆடு மேய்ப்போர் வைத்திருக்கும் ராஜபாளையம் வகை யைச்சேர்ந்த வயதான வேட்டை நாயாகத்தான் இருக்கும். சிறுத்தையாக இருக்க வாய்ப்பில்லை என தெரிவித்தார்.

மாநிலத்தின் மையத்தில், கல்குவாரிகள் அதிகமுள்ள பெரம்பலூர் மாவட்டத்தில், கடந்த 2013ஆம் ஆண்டு பாறைகளை பிளக்கும் வெடிச்சத்தங்களுக்கு இடையே கவுல்பாளையம் மலைக்குன்று மீது தங்கிக் கொண்டு, அவ்வூரைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட ஆடுகளை கவ்வி ச்சென்று சாப்பிட்டுவந்த சி றுத்தை செப்டம்பர் 9ம்தேதி வனத்துறையின் கூண்டுக் குள் சிக்கும் வரை பெரம்ப லூர் மாவட்டத்திலே சிறுத்தை இருந்ததா என்பது சிறிதளவும் நம்பமுடியாத சொல்லாகவே இருந்துவந்தது.

அதனை பிடித்தப் பிறகும் அதன்குட்டிகள் உலவுவதாக வதந்திகள் தான் பல உலா வந்தன. வேறெந்தச் சி றுத்தையும் யாருடைய கண்களிலும் இதுவரை சிக்கவே இல்லை. இருந்தும் கடந்த வாரம் துறையூர் அருகே நடமாடியதாகக் கூறப்பட்ட சிறுத்தைதான் பச்சைமலைமீது பயணித்து எசனைக்கு வந்துவிட்டதோ எனவும் சந்தேகிக்கின்றனர்.

Related Stories: