வாணியம்பாடி தாலுகாவில் விஏஓ அலுவலகங்களில் சான்றுகள் பெற முடியாமல் மக்கள் அவதி

வாணியம்பாடி : வாணியம்பாடி தாலுகாவில் உள்ள விஏஓ அலுலகங்களில் விஏஓக்கள் சரிவர இருப்பதில்லை. இதனால் சான்றுகள் பெற முடியாமல் அவதிக்குள்ளாவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுகாவில் 30க்கும் மேற்பட்ட விஏஓ அலுவலகம் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியில் இருக்கக்கூடிய விஏஓக்கள் சம்பந்தப்பட்ட இடத்திலேயே தங்கி மக்களுக்கு சேவை ஆற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது புதிதாக சொந்த ஊருக்கே பணிமாற்றம் செய்து செல்லக்கூடிய விஏஓக்களும் அந்தந்த பகுதிகளில் பணியாற்ற வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோளாக உள்ளது. ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தால் கூட கிராம நிர்வாக அலுவலரை சந்திக்கக் கூடிய ஒரு நிலை தான் தற்போது வரை இருந்து வருகிறது.

மேலும், பல்வேறு விஏஓ அலுவலகங்களும் எப்போதுமே மூடியே கிடக்கிறது. இதனால் மனுக்கள், சான்றிதழ் பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய சூழ்நிலை உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது, கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தாலும் பொதுமக்கள் முறையாக மாஸ்க் அணிவது இல்லை எனக்கூறி அவர்களை கண்காணிக்க வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, விஏஓவை அழைத்துச் செல்கிறாராம்.

மேலும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதிக நேரம் முகாமிட வேண்டி உள்ளதால், மனக்குமுறலை சொல்ல முடியாமல் தவித்து வருவதாக விஏஓக்கள் கூறுகின்றனர். கிராம நிர்வாக அலுவலரை சந்திக்க செல்லும்போது மக்களுடைய குறைகளைக் கேட்டறிந்து அவர்களுக்கு முறையாக சான்றிதழ் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 எனவே, மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: