பிலிப்பைன்ஸ் கடலில் குவாட் கடற்படைகள் போர் பயிற்சி துவக்கம்

புதுடெல்லி:  இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளும் இணைந்து குவாட் கூட்டணியை உருவாக்கி உள்ளது. இந்தியா - அமெரிக்க கடற்படைகள் கடந்த 1992ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் முதல் மலபார் பயிற்சியை இந்திய பெருங்கடலில் நடத்தி வந்தன. 2015ம் ஆண்டு முதல் ஜப்பான் இதில் நிரந்தர உறுப்பினரானது.   குவாட் அமைப்பில் இணைந்த ஆஸ்திரேலியா கடந்த ஆண்டுதான் மலபார் பயிற்சியில் இணைந்தது.

இந்த 4 நாடுகளும் இணைந்து நடத்தும் இந்த கூட்டு கடற்படை பயிற்சி, பிலிப்பைன்ஸ் கடலின் குவாம் கடற்கரை பகுதியில் நேற்று தொடங்கியது.  நான்கு நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சிக்கு ‘மலபார் - 21’ என பெயரிடப்பட்டு உள்ளது.  இந்திய கடற்படைக்கு சொந்தமான பீரங்கி தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் ஷிவாலிக், நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பலான ஐஎன்எஸ் காத்மாட்,  நீண்ட தூர கடல் ரோந்து விமானமான பி81  ஆகியவை  இந்த பயிற்சியில் பங்கேற்றுள்ளன.

Related Stories: