பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம்... இடைக்கால உத்தரவை அடுத்த வாரம் பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம்

டெல்லி: பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அடுத்த வாரம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது. இஸ்ரேலின் என்.எஸ்.ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் உள்ள முக்கிய நபர்கள் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் கடந்த மாதங்களுக்கு முன்னதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

அதாவது, இந்தியாவில் முக்கியமான பத்திரிகையாளர்கள், அதிகாரிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அரசு அதிகாரிகள், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு ஒட்டு கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தது. இது தொடர்பாக பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் போடப்பட்டது.

அந்த வழக்குகளை நீதிபதிகள் விசாரித்து வருகின்றனர். இந்தநிலையில், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அடுத்த வாரம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: