சோளிங்கர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு

சோளிங்கர் : ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் 35 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 108 வைணவ திவ்ய தலங்களில் ஒன்றாக விளங்கும் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இதேபோல் பிரபல தனியார் தொழிற்சாலை, தாலுகா அலுவலகம், நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகிறது.

அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு ஏதுவாக சோளிங்கர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதேபோல், இந்த கோரிக்கையை சோளிங்கர் தொகுதி எம்எல்ஏக்களும் சட்டமன்றத்தில் முன்வைத்து வந்தனர். இந்நிலையில், நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் சோளிங்கர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. புதிதாக உதயமாகும் நகராட்சி எல்லைக்குள் சோளிங்கரில் ஏற்கனவே உள்ள 18 வார்டுகள் மற்றும் பாண்டியநல்லூர் ஊராட்சி, சோம சமுத்திரம் ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: