கன்னிவாடி அருகே கனமழையால் குளமான சாலை

சின்னாளபட்டி : கன்னிவாடி அருகே நேற்று பெய்த கனமழையால் வடிகால் இல்லாததால் சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியிருந்தது.திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில் இருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. தற்போது கன்னிவாடியில் இருந்து ஒட்டன்சத்திரம் வரை நான்கு வழிச்சாலை உள்ளது.  நேற்று இப்பகுதியில் மாலை கனமழை பெய்தது.

இதனால் ஸ்ரீராமபுரம் பேரூராட்சி பகுதிக்கு வரும் வெள்ளமரத்துப்பட்டியில் இருந்து கருப்பிமடம் வரை செல்லும் சாலையின் இருபுறமும் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் டூவீலரில் செல்வோர் அவதியடைந்தனர். மழைநீர் தேங்கியுள்ளதால் தார்ச்சாலை சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நான்கு வழிச்சாலை நிர்வாகம் முறையாக மழைநீர் இருந்து வழிந்தோட வடிகால் வசதி அமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: