புதுடெல்லி: வருமான வரி கணக்கு தாக்கலை எளிமையாக்க 164.5 கோடியில் இன்போசிஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த ஒன்றிய அரசு, புதிய இணையதளத்தை (www.incometax.gov.in) கடந்த ஜூன் 7ம் தேதி அறிமுகம் செய்தது. இரண்டரை மாதங்கள் நிறைவடைந்தும், பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு வந்தது. இந்த சூழலில், கடந்த 2 நாட்களாக இந்த இணையதளம் முற்றிலுமாக முடங்கியது. இதையடுத்து, கடந்த 2 மாதங்களாக இணையதளத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நேற்று நேரில் விளக்கம் அளிக்கும்படி இன்போசிஸ் நிர்வாக இயக்குனர், தலைமை நிர்வாக அதிகாரி சலீல் பரேக் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.