மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைகுளத்தில் தீர்த்தவாரி

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆவணி மூல திருவிழா ஆக. 5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. சுவாமி சுந்தரேஸ்வரர், வந்தியம்மைக்கு முக்தி அளிப்பதற்காக பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் லீலை கோயில் வளாகத்தில் நடந்தது. நேற்று முன்தினம் காலை சுந்தரேஸ்வரர், பிரியாவிடை மற்றும் மீனாட்சி அம்மன் கோயிலில் சட்டத்தேரில் எழுந்தருளினர். அதனை தொடர்ந்து இரவு 7 மணியளவில் சப்தவர்ண சப்பரத்தில் சுந்தரேஸ்வரர், பிரியாவிடை மற்றும் மீனாட்சியம்மன் ஆடி வீதியில் வலம் வந்தனர். இதைத் தொடர்ந்து கோயிலில் உள்ள பொற்றாமரைக்குளத்தில் நேற்று மாலை நடந்த தீர்த்தவாரியுடன் ஆவணி மூல திருவிழா நிறைவு பெற்றது.

Related Stories: