விருதுநகரில் புதர் மண்டி கிடக்கும் நகராட்சி பூங்கா: அடிப்படை வசதிகள் செய்திட கோரிக்கை

விருதுநகர்: விருதுநகர் மக்களின் பொழுது போக்கிற்கு இடங்கள் இல்லாத நிலையில் நகராட்சி பூங்காவே மக்களின் புகலிடமாக இருக்கிறது. சிதிலடைந்த கிடந்த பூங்காவில் நகராட்சி நூற்றாண்டு நிதியில் 1.50 கோடி செலவில் செய்யப்பட்ட பணிகள் தரமாக செய்யவில்லை. நடைபாதைகள், நீருற்றுகள், மரங்களை சுற்றி கட்டப்பட்ட சுவர்கள் விரிசல் விட்டுள்ளன. இந்நிலையில் காலை 5 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி திறக்கப்படுகிறது. தினசரி நடைபயிற்சிக்கு இளைஞர்கள், முதியோர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் நடைபயிற்சிக்கு வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பூங்காவில் உள்ள நீருற்றுகள் செயல்பாடாத நிலையில் அவற்றில் தேங்கி நிற்கும் தண்ணீர் கழிவுநீராக கிடக்கிறது. மரங்கள் அடர்ந்து இருப்பதால் கொசு அதிக அளவில் இருக்கும் நிலையில், தேங்கி கிடக்கும் தண்ணீரில் டெங்கு கொசுகள் உற்பத்தியாக வாய்ப்புகள் உள்ளது. குழந்தைகள் விளையாட்டு திடல் துவங்கி, நடைபாதையின் இருபுறங்களிலும் புதர்மண்டி கிடக்கின்றன. உள்பகுதியில் குவிந்து கிடக்கும் பட்டிகற்களில் விஷஜந்துகள் நடமாட்டம் உள்ளது.

இரவு நேரங்களில் உள்பகுதியில் இருள் சூழ்ந்துள்ள பகுதிகளில் கூடுதல் மின்விளக்குகள் அமைக்க வேண்டும். நடைப்பயிற்சிக்கு வந்து செல்வோருக்கு வசதியாக அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். பழமையான மரங்களில் காய்ந்த கிளைகள் தொங்கி கொண்டு இருப்பதை அகற்ற வேண்டும். சறுக்குகள், ஊஞ்சல் உள்ளிட்ட சிறுவர் விளையாட்டு உபரணங்களை தரமாக மறுசீரமைப்பு செய்ய வேண்டும். காவலாளி, பராமரிப்பு பணிகளுக்கு பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும். பூங்காவின் உள்பகுதியை வருமான நோக்கில் சிலர் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: