மகாராஜா ரஞ்சித் சிங் சிலை உடைப்பு பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

புதுடெல்லி: லாகூரில் மகாராஜா ரஞ்சித் சிங் சிலை இடித்து தகர்க்கப்பட்டதற்கு, பாகிஸ்தனை இந்தியா கடுமையாக சாடி உள்ளது. ‘பஞ்சாப் சிங்கம்’ என்று அறியப்படும் மகாராஜா ரஞ்சித் சிங், சீக்கிய பேரரசின் முதல் மகாராஜா ஆவார். இவருக்கு பாகிஸ்தான் தலைநகர் லாகூரில் கடந்த 2019ம் ஆண்டு சிலை திறக்கப்பட்டது. இந்த சிலை ஏற்கனவே 2 முறை சேதப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த சிலை 3வது முறையாக தகர்க்கப்பட்டதாக நேற்று செய்திகள் வெளியாகின. இதற்கு பாகிஸ்தானை, இந்தியா கடுமையாக சாடி உள்ளது.

ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘சிறுபான்மை சமூகங்களிடையே ‘அச்சத்தின் சூழலை’ உருவாக்கும் இதுபோன்ற தாக்குதல்களைத் தடுப்பதற்கான பாகிஸ்தான் அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. அவர்களின் வழிபாட்டுத் தலங்கள், கலாச்சார பாரம்பரியம், தனியார் சொத்துக்கள் மீதான தாக்குதல்கள் உட்பட, பாகிஸ்தானில் ஆபத்து விகிதம் அதிகரித்து வருகிறது. இத்தகைய தாக்குதல்கள் பாகிஸ்தான் சமூகத்தில் வளர்ந்து வரும் சகிப்புத்தன்மை மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கு மரியாதை இல்லாததை எடுத்துக்காட்டுகின்றன. ரஹீம் யார் கான் நகரில் சில நாட்களுக்கு முன்பு  சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ய பாகிஸ்தான் அரசை வலியுறுத்துகிறோம்’’ என்றார். 

Related Stories: