அமளி செய்த எம்.பிக்கள் மீது நடவடிக்கை தேவை: வெங்கையாவிடம் அமைச்சர்கள் வலியுறுத்தல்

புதுடெல்லி: கடந்த ஜூலை மாதம் 19ம் தேதியன்று மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. பெகாசஸ், வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தன. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கண்ணியக் குறைவான நடவடிக்கைக்கு சபாநாயகர் ஓம்பிர்லா, மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வேதனை தெரிவித்திருந்தனர்.இதனால் முன்கூட்டியே கூட்டத்தொடர் முடிக்கப்பட்டது. இந்நிலையில் கூட்டத்தொடரில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட மாநிலங்களவை எம்பிக்கள்மீது நடவடி க்கை எடுக்கும்படி ஒன்றிய மூத்த அமைச்சர்கள் கோரி க்கை வைத்துள்ளனர். ஒன்றிய அமைச்சர்கள் பியூஷ் கோயல், பிரல்கத் ஜோஷி உள்ளிட்ட 7 அமைச்சர்கள் மாநிலங் களவை தலைவர் வெங் ைகயா நாயுடுவை நேற்று சந்தித்து புகார் அளித்துள்ளனர்.

Related Stories: