நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்

சென்னை: பேரவையில் வேளாண் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்து பேசியதாவது: பல்வேறு பயிர்களில் இயற்கை வேளாண்மை தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு,தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக வளாகத்தில், ஏற்கெனவே கோயம்புத்தூரில் இயங்கி வரும் வளங்குன்றா வேளாண்மைக்கான துறை மேம்படுத்தப்பட்டு, ‘நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்’ என பெயர் மாற்றம்  செய்யப்படும். இதற்கென, முதற்கட்டமாக ரூ.3 கோடி மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். l மானாவாரி பயிர்களுக்கான ஆராய்ச்சியினை மேம்படுத்த, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலுள்ள மண்டல ஆராய்ச்சி நிலையம், சிவகங்கை மாவட்டம், செட்டிநாட்டில் உள்ள மானாவாரி சாகுபடிக்கான மகத்துவ மையம் ஆகியவற்றின் செயல்பாடுகள் வலுப்படுத்தப்பட்டு மானாவாரி விவசாயிகளுக்கான தொழில்நுட்பங்கள் வழங்கப்படும். இதற்காக, ரூ.50 லட்சம் மாநில  நிதியிலிருந்து ஒதுகீடு செய்யப்படும்.

Related Stories: