சுதந்திர தினத்தை சீர்குலைக்க சதி டிரோன் மூலம் ஆயுதம் சப்ளை ஜம்முவில் 4 தீவிரவாதிகள் கைது

ஜம்மு: சுதந்திர தினத்தை சீர்குலைக்க திட்டமிட்டு டிரோன்கள் மூலம் ஆயுதங்கள் சப்ளை செய்த 4 தீவிரவாதிகள் மற்றும் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து சீன குண்டுகள், துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.  

காஷ்மீர் பள்ளத்தாக்கில் டிரோன்கள் மூலம் ஆயுதங்களை சேகரித்து, சுதந்திர தினத்தை சீர்குலைக்கும் வகையில் ஆகஸ்ட் 15க்கு முன் ஜம்மு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் வாகனங்களின் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் திட்டமிட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஜம்முவில் பதுங்கி இருந்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த 4 ஜெய்ஷ் தீவிரவாதிகள் மற்றும் கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர்.

புல்வாமாவைச் சேர்ந்த சைபுல்லா (எ) முண்டாசீர் மஞ்சூர் முதலில் கைது செய்யப்பட்டார், அவரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி, ஒரு பத்திரிகை மற்றும் இரண்டு சீன கைக்குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. காஷ்மீருக்கு ஆயுதங்களை கொண்டு செல்ல பயன்படுத்திய அவரது லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, விசாரணையில் இவர் கொடுத்த தகவலின் ேபரில் இசாகர் கான் (எ) சோனு கான் உட்பட மூன்று ஜெய்ஷ் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

பாகிஸ்தானில் இருந்து அமிர்தசரஸ் அருகே வந்து  டிரோன் மூலம் போடப்படும் ஆயுதங்களை சேகரிக்கும் பொறுப்பும், பானிபட் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், அயோத்தி ராம ஜென்ம பூமியை உளவு பார்க்கும் பொறுப்பு இசாகர் கானிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்துள்ளது. ஆனால், அவர் அந்த பணியை நிறைவேற்றும் முன் கைது செய்யப்பட்டார். இதேபோல், சோபியான் மாவட்டத்தில் தவுசீப் அகமது ஷா (எ) ஷோக்கெட், புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த  பழ வியாபாரியான ஜஹாங்கீர் அகமது பட் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: