தமிழகத்தில் போலி வக்கீல்கள் அதிகரிப்பு வெளிமாநிலங்களில் சட்டம் படித்தோர் பதிவிற்கு புதிய விதி உருவாக்க வழக்கு: பார் கவுன்சில் பதிலளிக்க உத்தரவு

மதுரை: மதுரை, அண்ணாநகரைச் சேர்ந்த வக்கீல் முத்துக்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் போலி வக்கீல்கள் அதிகரித்துவிட்டனர். ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் சட்டம் படித்ததாகக் கூறி போலி வருகை சான்றிதழ் பெற்று வக்கீல்களாக பதிவு செய்கின்றனர். இதை தடுக்கும் வகையில் தமிழகத்தில் கூடுதல் சட்டக் கல்லூரிகளும், பி.எல் (ஹானர்ஸ்) படிப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், வெளிமாநிலங்களில் படித்ததாக பதிவு செய்வது குறையவில்லை. எனவே, அவர்கள் வெளிமாநிலத்திற்கு சென்று படித்தார்களா, எங்கு தங்கியிருந்தனர் என்பதற்கான சான்று, வருகை பதிவேடு உள்ளிட்ட விவரங்களை, உதவி போலீஸ் கமிஷனரை நியமித்து, விசாரித்து சான்றிதழ் வழங்கிய பிறகு பதிவு செய்திடும் வகையில், தேவையான விதிகளை உருவாக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் பார் கவுன்சில், டிஜிபி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

Related Stories: